கொடூரம்.. ஓடும் காரில் தாய், 6 வயது மகள் பாலியல் வன்கொடுமை !!

கொடூரம்.. ஓடும் காரில் தாய், 6 வயது மகள் பாலியல் வன்கொடுமை !!

Update: 2022-06-27 18:56 GMT

பெண் மற்றும் அவரது 6 வயது மகளை ஒரு கும்பல் காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் நேற்று இரவு, தனது 6 வயது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் லிப்ட் கொடுப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் தனது மகளுடன் அந்த காரில் ஏறியுள்ளார்.

ஆனால், காரில் ஏற்கனவே அந்நபரின் கூட்டாளிகள் இருந்துள்ளனர். அப்போது, ஓடும் காரில் அந்த பெண்ணையும் அவரின் 6 வயது மகளையும் மிரட்டி காரில் இருந்தவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணையும், அவரது மகளையும் ஒரு ஏரியின் அருகே இறக்கி விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

பின்னர் அந்தப் பெண் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, விசாரணையில் காரை ஓட்டியவர் சோனு என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறை அதிகாரிகள், காரில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று அந்த பெண் சரியாக கூறவில்லை. காரை ஓட்டியவர் பெயர் சோனு என்று மட்டும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம், என்றார்.


newstm.in
 

Tags:    

Similar News