வீடுகளின் விலை உயருது.. ‘கிரெடாய்’ சென்னை பிரிவு தகவல்..!

வீடுகளின் விலை உயருது.. ‘கிரெடாய்’ சென்னை பிரிவு தகவல்..!

Update: 2022-07-01 05:00 GMT

‘கட்டுமான பொருட்களின் விலை உயர்வு காரணமாக, சில மாதங்களாக வீடுகளின் விலை உயர்ந்து வருகிறது’ என, கிரெடாய் சென்னை பிரிவு தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிலத்தின் விலையில் கடந்த ஆறு மாதங்களில் சதுர அடிக்கு 1,000 ரூபாய் குறைத்து, சலுகை வழங்குவதாக கடந்த 28ம் தேதி நாளிதழில் செய்தி வெளியானது.

இதுகுறித்து, கிரெடாய் (இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு) சென்னை பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதன் எதிரொலியாக, சென்னையில் கடந்த சில மாதங்களாக வீடுகளின் விலை உயர்ந்து வருகிறது. கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நிலை தொடரும்.

இதனால், வீடுகள் விலையை குறைக்கும் எந்த முடிவையும் கிரெடாய் அமைப்பு உறுப்பினர்கள் எடுக்கவில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News