மாணவிகள் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

மாணவிகள் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

Update: 2022-06-26 18:42 GMT

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்க மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் ( Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Assurance Scheme ) என அரசு மாற்றியமைத்தது.

இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள்  பதிவு செய்ய வேண்டும்.

மாணவிகள் மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?

பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை, penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் நகலை வழங்கி மாணவர்கள் தங்களது கல்லூரிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

இணைய வசதி உள்ள மாணவிகள் தாங்களாகவே கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும், தங்களது விவரங்களை பதிவிடலாம்  

  
newstm.in

Similar News