எப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ? - முழு விளக்கம் !
எப்படி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ? - முழு விளக்கம் !
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். அதனை பார்க்கலாம்.
- நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக நாளை காலை 8 மணிக்கு தொடங்கும்.
- முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படும். யாருக்கு வாக்கு என்பதை வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்த பிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
- தபால் வாக்குகள் முடிந்த பிறகு ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்து வரப்படும்
- வார்டு வாரியாக பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் & முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்படும்.
- வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டப்படும் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்
- வாக்கு எண்ணிக்கை மையத்தில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது.
- வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததும் உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டம்
- கொரனா பரவல் காலம் என்பதால் அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
- வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- தபால் வாக்குகளில் தொடங்கி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்
newstm.in