நூறாவது நாள் பட பாணியில் பயங்கரம்... !! வரதட்சணைக்காக மனைவி மற்றும் 7 வயது மகளை என்ன செய்தார் பாருங்க..!!

நூறாவது நாள் பட பாணியில் பயங்கரம்... !! வரதட்சணைக்காக மனைவி மற்றும் 7 வயது மகளை என்ன செய்தார் பாருங்க..!!

Update: 2022-05-16 12:32 GMT

தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 200க்கும் மேற்பட்ட ஸ்வீட்ஸ் கடைகளை நடத்தி வருபவர் ராகவா ரெட்டி. இவரது மகன் ஏக் நாத் ரெட்டி. இவருக்குக் கடந்த 2014ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரகண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு வரதட்சணையாகப் பெண் வீட்டார் ரூ.1.3 கோடி ரூபாய் சீர் வரிசை மற்றும் மாப்பிள்ளைக்கு ரூ.75 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். ஆடம்பரமாக நடைபெற்றது இவர்களின் திருமணம். ஆடம்பர திருமணம் 2 கோடி வரதட்சணை கொடுத்தும்  மாப்பிள்ளையின் பெற்றோர் மகன் பெயரில் ஹைதராபாத்தில் ஒரு வணிக வளாகம் வரதட்சணையாகக் கேட்டுள்ளனர்.இதற்கு பிரகண்யாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் மனைவியை அடித்து கொடுமை படத்தி வந்துள்ளார் ஏக் நாத் ரெட்டி. இதையடுத்து மனைவியை விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் ரெட்டி மனைவி தங்கி இருந்த அறையின் மின்சாரத்தை, தண்ணீர் இணைப்பையும் முதலில் துண்டித்துள்ளார்.

மேலும் மனைவி மற்றும் தனது 7 வயது மகள் அந்த அறையை விட்டு வெளியே வராமல் இருக்கத் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியுள்ளார். இதனால் அவர்கள் அறை முழுமையாக இருட்டாகி, காற்றுகூட இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளது. இது குறித்து தனது பெற்றோருக்கு பிரகண்யா தகவல் கொடுத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். பிறகு போலிஸார் ஏக் நாத் ரெட்டியின் வீட்டிற்கு வந்து, அறையின் முன்பு கட்டி எழுப்பப்பட்டிருந்த தடுப்புச் சுவரை உடைத்து பிரகண்யாவையும் அவரது மகளையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்தவுடன் ஏக்நாத் ரெட்டி தலைமறைவாகியுள்ளார்.

Tags:    

Similar News