கணவன் - மனைவி தகராறு.. மனைவி எடுத்த விபரீத முடிவு.. பறிபோனது 2 குழந்தைகளின் உயிர்..!

கணவன் - மனைவி தகராறு.. மனைவி எடுத்த விபரீத முடிவு.. பறிபோனது 2 குழந்தைகளின் உயிர்..!

Update: 2022-02-02 04:30 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வரும் ரமேஷ் என்பவர் தனது மனைவி சகாய செல்வி மற்றும் வினில் குமார் (4), மாளவிகா (1) ஆகிய இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கணவர் - மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் தம்பதியினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.


இதனால் மனமுடைந்த சகாய செல்வி தனது இரு குழந்தைகளுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில், இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், சகாய செல்வி கிணற்றின் சுற்றுச் சுவரை பிடித்து உயிர் பிழைத்தார்.


இதையடுத்து சகாய செல்வியை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Similar News