மனைவிக்கு சேலை கட்ட தெரியாததால் கணவர் தற்கொலை !!
மனைவிக்கு சேலை கட்ட தெரியாததால் கணவர் தற்கொலை !!
மனைவிக்கு சேலை கட்ட தெரியவில்லை என்பதற்காக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே வசித்து வந்த சமதான் சபேல் என்ற 24 வயது இளைஞருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இளம் இளைஞரான இவர் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் திருமணம் முடிந்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
எனினும் அப்பெண் திருமணத்துக்கு பிறகும் ஜீன்ஸ், சுடிதார் போன்ற ஆடைகளையே அணிந்து வந்துள்ளார். ஆனால், கணவர் சமதான், தனது மனைவியிடம் சேலை அணியுமாறு பல முறை கூறியும் அப்பெண் கண்டுக்கொள்ளவில்லை. மாறாக அவருக்கு சேலை கட்டவும் தெரியாது என தெரிகிறது. இத்தனை வயதாகியும் சேலை கட்ட தெரியவில்லையா என்று அவர்களுக்குள் அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மனைவியின் நடத்தையிலும் சமதான் சபேல்க்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் சமதான் சபேல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட மனைவி பெரும் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், 'மனைவிக்கு சேலை கட்டத் தெரியவில்லை; ஒழுங்காக நடக்கவோ, பேசவோ தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன், என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவுரங்காபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
newstm.in