மகள்கள் காதல் திருணம் செய்ததால் மனைவியை கொன்ற கணவன்!!
மகள்கள் காதல் திருணம் செய்ததால் மனைவியை கொன்ற கணவன்!!
மகள்கள் இரண்டு பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதால், குடிபோதையில் கணவன், மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் நாகூர் அருகே கடம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் - முத்துலட்சுமி தம்பதிக்கு ஹேமலதா(26), பவித்ரா(24), ஐஸ்வர்யா(23), பிரகதி(22) என நான்கு மகள்கள்.
முதல் இரண்டு மகளுக்கு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. மற்ற இரண்டு மகள்களும் காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் சிங்காரவேலு சில வருடங்களாக மனைவி முத்துலட்சுமி மீது கோபத்தில் இருந்துள்ளார். தினமும் இரவு மதுபோதையில் வந்து மனைவியை திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல மது போதையில் வீட்டுக்கு வந்த சிங்காரவேலு மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டார். மகள்கள் ஓடிப்போக நீதான் காரணம் எனக் கூறி முத்துலட்சுமியின் தலையில் கட்டையால் அடித்து சிங்காரவேலு கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார், சிங்காரவேலை கைது செய்து, முத்துலட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in