விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற பிரபல நடிகையின் கணவர்!!

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற பிரபல நடிகையின் கணவர்!!

Update: 2022-03-07 19:36 GMT

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, சினிமா - சின்னத்திரை என இரண்டிலும் பிரபலமானவர் நடிகை ஆர்த்தி. இவரது கணவர் கணேஷ்கர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் சாலையில் உள்ள தடுப்பில் மோதி விட்டு திடீரென தலைமறைவாகி விட்டதாகவும், அவரை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் கணேஷ்கர் பட்டினப்பாக்கம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பில் மோதியது. அப்போது அவரது காரின் பின்னால் வந்த இரு சக்கர வாகனம் ஒன்று மோதியதாக தெரிகிறது.

இதில் பைக்கில் வந்தவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இடத்திலேயே காரை விட்டுவிட்டு கணேஷ்கர் அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி, அவர் வீட்டிற்கு வரவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து மருத்துவமனைகளில் போலீசார் அவரை தேடினர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கணேஷ்கரை தேடி வரும் போலீஸார், அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

newstm.in

Similar News