இரவில் வந்த செல்போன் அழைப்பால் கணவன் சோக முடிவு.. மனைவி, குழந்தை தவிப்பு !!

இரவில் வந்த செல்போன் அழைப்பால் கணவன் சோக முடிவு.. மனைவி, குழந்தை தவிப்பு !!

Update: 2022-02-04 17:00 GMT

மனைவி திட்டியதால் கணவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பனைமடல் பகுதியில் மணிகண்டன் (28) - மதுபாலா தம்பதி வசித்துவந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. மேலும் 2 வயதில் ஒரு மகன் உள்ளான். இவர்கள் வாழ்க்கை சந்தோசமாக சென்ற நிலையில், செல்போனால் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. 

அதாவது, மணிகண்டன் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வந்தார். மேலும் குடும்பத்துடன் ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியில் வசித்து வந்தார்.  மணிகண்டன் அவ்வப்போது அதிகநேரம் செல்போனில் பேசிவந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று மணிகண்டன் இரவில் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதை அவருடைய மனைவி மதுபாலா இவ்வளவு நேரம் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மணிகண்டன் வீட்டில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி திட்டியதால் தான் தற்கொலை செய்துக்கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

Similar News