கடைவீதி கூட பாராமல் பள்ளி ஆசிரியரின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்..!

கடைவீதி கூட பாராமல் பள்ளி ஆசிரியரின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவன்..!

Update: 2022-03-17 21:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே நல்லுச்சேரி கூடலூர் கிராமத்தை சேர்ந்த விக்டர் வினோத்குமார் (வயது 35). இவரது மனைவி புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட் (வயது 37). இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 6 மாத காலமாக கணவரை பிரிந்து ஹேமா ஜூலியட், கீழப்பாதி வாய்க்கால்கரை தெருவில் உள்ள தனது தந்தை அய்யாபிள்ளை என்பவர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ஹேமா ஜூலியட், சங்கரன்பந்தலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

நேற்று மாலை பள்ளியில் பணியை முடித்துவிட்டு ஹேமா ஜூலியட், கீழப்பாதியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதற்காக சங்கரன்பந்தலில் இருந்து செம்பனார்கோவில் கடைவீதிக்கு பேருந்தில் வந்தார். அப்போது அங்கு வந்த விக்டர் வினோத்குமார், தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது எனவும் கூறி தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்டர் வினோத்குமார், ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள செம்பனார்கோவில் கடைவீதியில், தனது மனைவி ஹேமா ஜூலியட்டின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்டர் வினோத்குமாரை கைது செய்தனர். கூட்டம் அதிகமுள்ள கடைவீதியில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News