கணவனை மரத்தில் கட்டிவைத்து மனைவிக்கு பாலியல் வன்கொடுமை!!

கணவனை மரத்தில் கட்டிவைத்து மனைவிக்கு பாலியல் வன்கொடுமை!!

Update: 2022-03-28 08:45 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கணவன், மனைவி வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்களை, திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய கும்பல் ஒன்று வழி மறித்தது.

இதையடுத்து கணவரை தாக்கி அவரை மரத்தில் கட்டி வைத்த கும்பல், அவரது கண் முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக முசாபர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை கைது செய்தனர்.

கைதானவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக, கணவரின் தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அவர்களைப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர்.

அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்திருந்த நிலையில், குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் வீடு திரும்பியதாக கணவர் கூறியுள்ளார்.குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவர் மிதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

4 பேர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றவர்கள் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்று தெரிவித்துள்ள போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News