மேகி சமைத்த மனைவியை கடுப்பில் விவாகரத்து செய்த கணவர்!!

மேகி சமைத்த மனைவியை கடுப்பில் விவாகரத்து செய்த கணவர்!!

Update: 2022-05-31 21:23 GMT

கர்நாடகாவில் மூன்று வேளையும் மேகி நூடுல்ஸ் சமைப்பதால் இளைஞர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

மைசூரைச் சேர்ந்த இளைஞருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது மனைவி திருமணம் நடந்த நாளிலிருந்து மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார்.

முதலில் அவர் மனைவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. பின்னர் போகப் போக கற்றுக்கொள்வார் என கணவர் நினைத்தார். ஆனால் அவர் தொடர்ந்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் மேகி நூடுல்ஸ் மட்டுமே சமைத்துக் கொடுத்துள்ளார்.

இதனால் கடுப்பான அவரது கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் சம்மதத்துடன் விவாகரத்து வழங்கியுள்ளது.

newstm.in

Similar News