சந்தேகத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவன்!!

சந்தேகத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவன்!!

Update: 2022-04-04 09:30 GMT

திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகர்ஜுனன்(30) - ஷர்மிளா(27) ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புக் கொள்ளாததால் இவர்கள் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் நண்பர்களின் உதவியுடன் காந்தி நகரில் உள்ள மூன்றாவது வீதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் நாகர்ஜுனனின் மனைவிக்கும் அவரது நண்பர் கார்த்திக்கிற்கும் தொடர்பு இருப்பதாக நாகர்ஜுனன் சந்தேகம் அடைந்தார்.

இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில் நாகர்ஜுனன் மற்றும் அவரது மனைவி ஷர்மிளாவிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த கணவர் நாகர்ஜுனன் மனைவியை கத்தியால் குத்தினார்.

பின்னர் வீட்டின் கதவை சாத்திவிட்டு வெளியேறினார். தொடர்ந்து மது குடிக்க நண்பர்களுடன் சென்ற நாகர்ஜுனன் மதுபோதையில் தனது வேறொரு நண்பர்களிடம் மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்தார்.

இதைதொடர்ந்து வீட்டிற்கு சென்று பார்த்த நண்பர்கள் நாகர்ஜுனனின் மனைவி ஷர்மிளா உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போத்தனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து நாகர்ஜுனனை  கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News