திருமணமான 3 ஆண்டுகளில் மனைவியைக் கொன்ற கணவன்!!
திருமணமான 3 ஆண்டுகளில் மனைவியைக் கொன்ற கணவன்!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கு ஓசூரை சேர்ந்த நந்தினி (26) என்ற பெண்ணுடன் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் உளார்.
திருமணமான சில மாதங்களிலேயே ராஜாமணிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், இதனால் அடிக்கடி கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
நாளடைவில் நந்தினியின் உறவினர்கள் யாரும் பார்க்க வரக்கூடாது என நந்தினிக்கு ராஜாமணி மற்றும் அவரது அக்கா லட்சுமி ஆகியோர் கட்டளையிட்டு தொடர்ந்து கொடுமைப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நந்தினி தலையின் பின்புறம் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நந்தினியின் தந்தை முரளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்து இருப்பதால் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கோட்டாட்சியர் நந்தினியின் கணவர் ராஜாமணியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ள காவல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
newstm.in