ஆற்றில் மனைவிக்கு முத்தம்கொடுத்த கணவன்.. தர்மஅடி கொடுத்த மக்கள்- வீடியோ !!

ஆற்றில் மனைவிக்கு முத்தம்கொடுத்த கணவன்.. தர்மஅடி கொடுத்த மக்கள்- வீடியோ !!

Update: 2022-06-23 18:30 GMT

ஆற்றில் குளிக்கும்போது மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவர் கும்பலால் தாக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் முக்கிய ஆறுகளில் ஒன்றான சரயு நதியில் இளைஞர்கள் உள்பட பலரும் குளித்துள்ளனர். அதில் ஆண் ஒருவர் சரயு நதியில் நீராடுகையில், அவர் அருகில் ஒரு பெண் இருக்கிறார். அப்போது அந்த நபர் தனது மனைவியை முத்தமிட்டுள்ளார்.

இதற்கு அங்கு சுற்றி இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் அந்தப் பெண்ணையும் ஆணையும் தனித்தனியாக அப்புறப்படுத்தினர்.

மேலும் மனைவி தான் என்றும் கூறிய பிறகும் முத்தம் கொடுத்ததற்காக அங்கிருந்தவர்கள் அந்நபர் மீது தாக்குதல் நடத்தினர். பதறிப்போன அப்பெண் தனது கணவரை பாதுகாக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இறுதியாக இருவரையும் சரயு நதியிலிருந்து அந்த கும்பல் அப்புறப்படுத்துகிறது. 

இது குறித்து அயோத்தியா காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டே, அந்த வீடியோ ஒரு வாரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது. அதில் உள்ள தம்பதியினரின் அடையாளம் தெரியவில்லை. அந்த தம்பதி புகார் கொடுத்தால் நாங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். சரயு நதி இந்துக்களின் புனித நதியாகக் கருதப்படுகிறது.  



newstm.in


 

Similar News