“யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்பு”: அண்ணாமலை பதில்!!

“யுவன் சங்கர் ராஜாவை விட நான் கருப்பு”: அண்ணாமலை பதில்!!

Update: 2022-04-19 09:45 GMT

பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜாவை விட தாம் கருப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதற்காக இசைஞானி இளையராஜாவை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் இளையராஜாவுக்கு கருத்து சுதந்திரம் உண்டு என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று வைரலானது

அவர் கருப்பு உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, 'கருப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்' என குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்தார்.

அதில், யுவன் சங்கர் ராஜாவை விட கருப்பு நான்; நானும் கருப்பு திராவிடன் தான் என்று தெரிவித்தார். மேலும் அவர், இவர்கள் அனைவரையும் விட தமிழ் உணர்வு அதிகம் கொண்டவன் நான் என்றும், எனக்கு சத்தியமாக இந்தி தெரியாது எனவும் தெரிவித்தார்.

newstm.in

Similar News