அதற்கு அடிமையாகி விட்டேன்.. மீள முடியவில்லை.. 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!

அதற்கு அடிமையாகி விட்டேன்.. மீள முடியவில்லை.. 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை..!

Update: 2022-06-07 11:17 GMT

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன் (16). 11-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த சனிக்கிழமை தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி எழுதி இருந்த மூன்று பக்க கடிதம் ஒன்று கிடைத்தது.

அந்த கடிதத்தில், ‘நான் செல்போனுக்கு அடிமையாகி விட்டேன்; என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.


அந்த விசாரணையில், ‘எங்கள் மகள் நன்றாக படிக்கக் கூடியவர். அவள் தினமும் அறையை சாத்திக் கொண்டு தான் படிப்பாள். கடந்த சனிக்கிழமை அப்படி தான் படித்துக் கொண்டிருந்தாள்.

சாப்பிட வருமாறு கதவை தட்டிய போதுதான் அவர் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்’ என்று பெற்றோர் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், ‘மாணவி, செல்போனுக்கு அடிமையானதற்கான பெரிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. அடிக்கடி யூ-டியூபில் கொரியன் படங்களில் நிகழ்ச்சியை பார்த்ததாக தெரிகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. இருந்தாலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Similar News