வாழப் பிடிக்கவில்லை.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி..!

வாழப் பிடிக்கவில்லை.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் அதிர்ச்சி..!

Update: 2022-02-10 17:50 GMT

சென்னை வானகரம் அருகே உள்ள அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சாவுன் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல், தனது மனைவியுடன் சாவுன் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் இரண்டு மகன்களும் படுத்து தூங்கினர்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது, அண்ணனுடன் படுத்திருந்த ஹாயஸ் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காத நிலையில், அதே குடியிருப்பில் உள்ள வீட்டின் பால்கனியில் சிறுவன் ஒருவன் தலை சிதறி இறந்து கிடப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்த சிறுவன், அதே குடியிருப்பை சேர்ந்த சாவுனின்  மகன் என்பது தெரியவந்தது.

பின்னர் சிறுவனது வீட்டுக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு, சிறுவன் ஹாருஸ் தனது கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அக்கடிதத்தில் ‘இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதன் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

அப்பா - அம்மா இருவரும் உடல் நிலையை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். போலீசார் யாரும் எனது பெற்றோரை தொந்தரவு செய்யக்கூடாது’ என எழுதி வைத்துள்ளார்.

சிறுவன் ஒருவன் இவ்வாறு தற்கொலை குறிப்பை எழுதி வைத்து விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News