கண்ணாடி வழியாகவே பார்த்தேன்.. விசாரணை ஆணையத்தில் இளவரசி விளக்கம்..!

கண்ணாடி வழியாகவே பார்த்தேன்.. விசாரணை ஆணையத்தில் இளவரசி விளக்கம்..!

Update: 2022-03-21 13:45 GMT

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (21-ம் தேதி), அவர்கள் இருவரும் விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகினர். அப்போது விளக்கம் அளித்த இளவரசி, “ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனைக்கு 75 நாட்களும் சென்றபோது, ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன்.

கடந்த 2014-ம் ஆண்டில் சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா மன உளைச்சலில் இருந்தார். அதேபோல், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அவர் உடல்நலக் குறைவுடன் இருந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது, சசிகலா மட்டுமே அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News