நான் பொதுக்குழுவில் கலந்துகொள்வேன்.. ஆனால்.? - ஓபிஎஸ் போட்ட ஒரு கன்டிஷன் !!
நான் பொதுக்குழுவில் கலந்துகொள்வேன்.. ஆனால்.? - ஓபிஎஸ் போட்ட ஒரு கன்டிஷன் !!
அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ஆம் தேதி (நாளை) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. இதனால் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரி, எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். ஒற்றைத் தலைமை விவகாரத்தால், பொதுக்குழு கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும், அதை ஒத்திவைக்கும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தாங்களும் கட்டாயம் அதில் பங்கேற்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல் நீதிமன்றமும் இது தொடர்பான வழக்கில், பொதுக்குழு நடத்த தடையில்லை என்றும், பொதுக்குழுவுக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்தநிலையில், உயர்நீதிமன்ற உள்ள மற்றொரு வழக்கு விசாரணையின்போது, நாளை நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் நான் கலந்துக் கொள்வேன். ஆனால், ஏற்கெனவே என்னிடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் கொண்டுவரக் கூடாது, என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
newstm.in