வீடு புகுந்து வெட்டுவேன்.. மிரட்டிய ஒன்றிய செயலாளருக்கு கால் முறிவு.. ஆஸ்பத்திரியில் அனுமதி..!

வீடு புகுந்து வெட்டுவேன்.. மிரட்டிய ஒன்றிய செயலாளருக்கு கால் முறிவு.. ஆஸ்பத்திரியில் அனுமதி..!

Update: 2022-02-05 15:57 GMT

தமிழகம் முழுவதும் வரும் 19-ம் தேதி, ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட  அதிமுக சார்பில் சாத்தூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷ், “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு யார் கட்சி மாறினாலும், அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன்.


இப்படி பேசுவதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்தாலும் பரவாயில்லை. எனவே, கட்சி மாற நினைப்பவர்கள் மரணத்திற்கு தயாராக இருங்கள்” என்று எச்சரிக்கை  விடுத்து பேசியுள்ளார்.

இது சம்பந்தமாக, கொலை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் விடுப்பது, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் போலீசார், தனிப்படை அமைத்து ஒன்றிய செயலாளர் சண்முக கணேஷை தேடி வந்தனர்.

இந்நிலையில், வீட்டில் பதுங்கியிருந்த அவரை பிடிக்க போலீசார் சென்றபோது, அவர் மாடியில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அவர் கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News