“வீதியில் நிர்வாணமாக செல்வேன்” : கணவனை மிரட்டிய மனைவி!!
“வீதியில் நிர்வாணமாக செல்வேன்” : கணவனை மிரட்டிய மனைவி!!
கணவரிடம் விவாகரத்து கோரிய மனைவி, கொடுக்க மறுத்தால் வீதியில் நிர்வாணமாக செல்வேன் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் தான் பெண் இப்படி தனது கணவரிடம் கூறியுள்ளார். கணவன் ஷரியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த விவாகரத்து முடிவு தனது விருப்பத்திற்கு எதிரானது என்றும் அதனால் அதனை ரத்து செய்யும்படியும் கேட்டு கொண்டார்.
அவரது வழக்கை எடுத்து கொள்ள நீதிமன்றம் மறுத்து விட்டது. ஷரியா சட்டத்தின்படி விவாகரத்திற்கான காரணம் அமைந்து விட்டது என அவரிடம் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தி உள்ளது.
சவுதி அரேபியாவில் விவாகரத்து விகிதங்கள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு மணிநேரத்திற்கு 7 வழக்குகள் பதிவாகின்றன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்கு விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டன என்றும் தெரிவித்துள்ளது.
newstm.in