திருமணத்தை நிறுத்தி விடுவேன்.. சவால் விட்ட இளைஞர் தூக்கு மாட்டி தற்கொலை..!

திருமணத்தை நிறுத்தி விடுவேன்.. சவால் விட்ட இளைஞர் தூக்கு மாட்டி தற்கொலை..!

Update: 2022-03-22 06:10 GMT

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூர் சேனையர் தெருவைச் சேர்ந்தவர் முத்து செல்வக்குமார் (25). இவர், லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை, முத்து செல்வக்குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் முத்து செல்வக்குமாரின் தங்கை திருமண விஷயமாக நெல்லைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு முத்து செல்வக்குமார் தொந்தரவு செய்துள்ளார். பணம் இல்லை எனக் கூறிவிட்டு அவருடைய தாயார் திருமண விஷயமாக வெளியே சென்றுவிட்டார்.

அவரது தங்கை மட்டும் வீட்டில் இருந்த நிலையில் மாலையில் முத்து செல்வக்குமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மாடியில் இருந்து கொண்டு தனது தங்கைக்கு போன் செய்து குடிக்க பணம் தரும்படியும் இல்லையென்றால் நான் செத்து உன் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

அவர் இதை கண்டுகொள்ளவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து மாடிக்கு சென்று அறைக் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறக்காத நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த பேன் மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கு மாட்டிக் கொண்டது தெரியவந்தது.

சேலையை அறுத்து முத்து செல்வக்குமாரை இறக்கிப் பார்த்தபோது, அவர் இறந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருடைய அண்ணன் பாலமுருகன் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆத்தூர் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் உடலை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News