ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் : ரூ.44,000 கோடிக்கு வாங்கிய டிஸ்னி ஹாட் ஸ்டார், ஜியோ!!
ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் : ரூ.44,000 கோடிக்கு வாங்கிய டிஸ்னி ஹாட் ஸ்டார், ஜியோ!!
அடுத்த 5 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமையை டிஸ்னி ஹாட் ஸ்டார் மற்றும் ஜியோ வயாகாம் நிறுவனங்கள் பெற்றுள்ளன.
2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிக்குரிய டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 15ஆவது சீசனுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) ஐபிஎல் போட்டிக்குரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றன.
உரிமத்தைப் பெறுவதில் டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், ரிலையன்ஸ் வயாகாம் 18 ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புக்கான உரிமை இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும், ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஜியோ நிறுவனமும் பெற்றுள்ளது.
தொலைகாட்சி உரிமம் 23,575 கோடி ரூபாய்க்கும், ஓடிடி உரிமம் 20,500 கோடி ரூபாய்க்கும் விற்பனை ஆகியுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கிறது.
newstm.in