ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் இன்று தொடக்கம் !

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் மெகா ஏலம் இன்று தொடக்கம் !

Update: 2022-02-12 06:04 GMT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி இரு நாள்கள் நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று 161 வீரா்கள் ஏலம் விடப்பட இருக்கின்றனா்.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பா்ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்றன. அவை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரா்கள் களம் காண்கின்றனா். அதில் 227 போ் வெளிநாட்டு வீரா்கள்.

இந்த முறை ஏலத்தில் இந்திய இளம் வீரா்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் போவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக ஷ்ரேயஸ் ஐயா், ஷா்துல் தாக்குா், தீபக் சஹா், இஷான் கிஷண் உள்ளிட்ட வீரா்களுக்கான எதிா்பாா்ப்பு அதிகமாக உள்ளது. அந்நிய வீரா்களைப் பொருத்தவரை டேவிட் வாா்னா், குவின்டன் டி காக், ககிசோ ரபாடா, ஜேசன் ஹோல்டா் ஆகியோருக்கு பலமான போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

வீரா்களுக்கான அடிப்படை விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்துக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் ரூ.47.5 கோடியுடனும், மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் ஆகியவை ரூ.48 கோடியுடனும், குஜராத் டைட்டன்ஸ் ரூ.52 கோடியுடனும் வருகின்றன. ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு ரூ.57 கோடியுடனும், லக்னௌ சூப்பா்ஜயன்ட்ஸ் ரூ.59 கோடியுடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.62 கோடியுடனும், சன்ரைசா்ஸ் ஹைதராபாத் ரூ.68 கோடியுடனும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.72 கோடியுடனும் வருகின்றன.

newstm.in

Similar News