ஐபிஎல் போட்டி நேரடி ஒளிபரப்பு.. தமிழக வெப்டிசைனர் கைது !!

ஐபிஎல் போட்டி நேரடி ஒளிபரப்பு.. தமிழக வெப்டிசைனர் கைது !!

Update: 2022-04-20 17:01 GMT

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை சட்ட விரோதமாக தனது செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்த வெப்டிசைனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்காலை சேர்ந்தவர் ராமமூர்த்தி (29). இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில்
வெப் டிசைனராக பணியாற்றி வந்தார். ஆனால் அவரது வேலைக்கு வேட்டுவைத்தது கொரோனா.

கொரோனா காலங்களில் வேலை பறிபோனதால் ராமமூர்த்தி சொந்த ஊருக்கு சென்றார். அங்கு, தனக்கு தெரிந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தான் கண்டுபிடித்த மொபைல் செயலி மூலம் சட்ட விரோதமாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.
 

 
மேலும், அந்த செயலியில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பி, அதில் தனியார் விளம்பரங்களை பெற்று வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஒளிபரப்பு உரிமம் பெற்ற தனியார் தொலைக்காட்சி அதிகாரிகள் ஹைதாராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஹைதாராபாத் போலீசாருக்கு, சட்டவிரோத செயலில் ஈடுபட்டது சிவகங்கை அருகே காங்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என தெரியவந்தது.

இதனையடுத்து, ராமமூர்த்தியை கைது செய்த போலீசார், சிவகங்கை குற்றவியல் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்காக அவரை ஹைதராபாத் அழைத்துச் சென்றனர். 


newstm.in

Similar News