ஐபிஎல் மெகா ஏலம்.. இந்திய அணி கேப்டனை எடுத்தது டெல்லி அணி !!

ஐபிஎல் மெகா ஏலம்.. இந்திய அணி கேப்டனை எடுத்தது டெல்லி அணி !!

Update: 2022-02-13 18:30 GMT

அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதில் வென்ற இந்திய அணி  வீரர்கள், ஐபிஎல் ஏலத்தில் பெரும் வரவேற்பை பெற்றனர்.

அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யஷ் துலை டெல்லி அணி 50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது. இந்தாண்டு புதிதாக அறிமுகமான 2 அணிகள் உட்பட 10 அணிகள் இதில் மோத உள்ளன. இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இரண்டாவது நாளாக நடக்கிறது. 

அதேபோல், இரண்டாவது நாளான இன்றும் ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த யஷ் துலை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. 19 வயதான அவரது அடிப்படை விலை 20 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், ரூ50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். யஷ் துல் உலகக்கோப்பை தொடரில் 229 ரன்கள் குவித்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News