ஐடி ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு.. விமான நிலையத்தில் பரபரப்பு..!
ஐடி ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு.. விமான நிலையத்தில் பரபரப்பு..!
பெங்களூரு மாரத்தஹள்ளியில் வசித்து வருபவர் யோகேஷ். இவர், ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், யோகேஷும் அவருடைய அலுவலக ஊழியர்கள் 5 பேரும் ஜெர்மனிக்கு செல்ல பெங்களூரு விமான நிலையம் வந்தனர்.
அவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ்கள் இருந்தன. ஆனால், அந்த சான்றிதழ்கள் விமான பயணத்திற்கு உகந்தது இல்லை என்று கூறி அவர்களை விமானத்தில் ஏற்ற விமான நிலைய ஊழியர்கள் மறுத்து விட்டனர். இதனால் 6 பேரும் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு 6 பேரையும் விமானத்தில் செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால், பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.