‘புஷ்பா என்றால் பிளவர் இல்லை பயர்’ - சசிகலா புஷ்பா பேச்சு!!

‘புஷ்பா என்றால் பிளவர் இல்லை பயர்’ - சசிகலா புஷ்பா பேச்சு!!

Update: 2022-05-14 05:45 GMT

அதிரடி பேச்சுகளுக்கும் அதிரடி செயல்களுக்கும் சொந்தக்காரரான அதிமுகவின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா.

அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி திருச்சி சிவாவை கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்து மீண்டும் பூதாகரமான சர்ச்சையை கிளப்பி, ஹாட் டாப்பிக்கில் சிக்கியவர் சசிகலா புஷ்பா.

மேலும் மறைந்த முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் தன்னை கன்னத்தில் அறைந்தனர் என மாநிலங்களவையில் அவர் பேசிய பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் அதிமுகவிலிருந்து விலகிய இவர், அதிரடியாக பாஜகவில் இணைந்தார். இவர் பாஜகவில் இணைந்த சில நாட்களில் இவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், திருச்செந்தூரில் மாவட்ட தலைவர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசிய அவர், ‘புஷ்பா என்றால் பிளவர் இல்லை பயர்’ என புஷ்பா திரைப்பட வசனத்தை பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், வருகின்ற வழியில் மாற்று கட்சியினரின் விளம்பர பதாகைகள், சுவர் விளம்பரங்கள் அதிகளவில் இருந்ததை பார்த்த போது மனம் வேதனையடைந்தாக கூறிய அவர், அனைத்து கிராமங்களிலும் பாஜக கட்சி விளம்பர பதாகைகள், கட்சிக் கொடியை பாஜகவினர் ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் பாஜகவில் மாநிலத் தலைவர் போல தான் அனைத்து மாவட்ட தலைவர்களும் தல போல தான் வாலும் இருக்கும் என பேசினார். இந்த கூட்டத்தில் பாஜக மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் நெல்லை அம்மாள் உட்பட பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News