'இது மட்டும் நடக்காவிட்டால் 15 மணி நேர மின்வெட்டு அமலாகும்' - எச்சரிக்கும் அதிகாரிகள்! !!

'இது மட்டும் நடக்காவிட்டால் 15 மணி நேர மின்வெட்டு அமலாகும்' - எச்சரிக்கும் அதிகாரிகள்! !!

Update: 2022-04-24 08:07 GMT

ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலக்கரி தட்டுப்பாடும், அதனால் ஏற்பட்டுள்ள மின் உற்பத்திக் குறைவும் வெகுவாக பாதிக்க ஆரம்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில மணி நேரங்கள்தான் மின்சாரம் ரத்தாகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்திக்காக 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. நாள்தோறும் 4,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில், மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனம் மூலம் 50,000 மெட்ரிக் டன் மட்டுமே கிடைப்பதால், 20 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. 

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்துவருகிறது. உள்நாட்டு நிலக்கரி மூலம் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு மூன்று ரூபாய் 50 காசுகள் செலவாகிறது. அதேநேரத்தில் வெளிநாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு 7 ரூபாய் செலவாகிறது.

தமிழக அரசு தற்போது 4.8 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. நாள்தோறும் 20 ஆயிரம் டன் தட்டுப்பாடு உள்ள நிலையில், உடனடியாக நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் தள்ளப்பட்டுள்து. இல்லையேல், கடந்த 2011-12 ஆம் ஆண்டு ஏற்பட்டது போன்று 12 முதல் 15 மணி நேரம் வரை மின்வெட்டை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், வட இந்தியாவில் மின் தட்டுப்பாடு , மின் தடை என்பது வழக்கமானதுதான் என்றாலும் தற்போது நிலைமை மோசமாக இருப்பதாக சொல்கிறாரக்ள். இந்தியாவின் மின் உற்பத்திக்கு நிலக்கரி மிகப் பெரிய தேவையாக உள்ளது. இந்திய மின் உற்பத்தியில் 70 சதவீதம் நிலக்கரியிலிருந்துதான் வருகிறது. 3 டிரில்லியன் பொருளாதாரமாக தன்னை உயர்த்திக் கொள்வதில் ஆர்வமாக இருக்கும் இந்தியாவுக்கு இந்த மின் தட்டுப்பாடும், தடையும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நிலக்கரியை விட்டு விட்டு மாற்று மின்சார உற்பத்திக்கு இந்தியா தன்னை மாற்றிக் கொ ண்டால் மட்டுமே அது நினைப்பதெல்லாம் நடக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

மின்தடை காரணமாக தொழில்துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். மின் தடைக்கு கட்சிகளையும், ஆட்சிகளையும் குறை சொல்வதற்குப் பதில் அனைத்து அரசுகளும் இணைந்து ஒருமித்து இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிகளை ஆராய்வதே நாட்டுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது என்றும் நிபுணர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.


newstm.in

Similar News