கலர் அப்பளம் சாப்பிட்டால் கேன்சர் வரும்!
கலர் அப்பளம் சாப்பிட்டால் கேன்சர் வரும்!
கலர் அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சாதாரணமாக விற்கப்பட்ட அப்பளங்கள் தற்போது கலர் சேர்த்து மக்களை கவரும் வகையில் விற்கப்படுகின்றன. வண்ணத்தால் கவரும் மக்கள் அதை வாங்கிச் சென்று பொரித்து சாப்பிடுகின்றனர், குழந்தைகளும் நிறத்தால் ஈர்க்கப்பட்டு அதிகமாக சாப்பிடுகின்றனர்.
ஆனால் வண்ணம் சேர்க்காத அப்பளம் தான் சாப்பிட வேண்டும் என்றும், இதுபோன்ற ரசாயன நிறமிகள் சேர்க்கப்பட்ட அப்பளம், வத்தல் சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்கிறது என்று உணவுத்துறை அதிகாரி சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கலர் வத்தலில் சிந்தடிக் வகையான வேதிப் பொருள் இருக்கிறது என்றும், அது குடலில் போய் தங்கி புற்றுநோயை உருவாக்கும் என்கிறார் அவர். அப்பளம் சாப்பிட ஆசைப்படுபவர்கள், கலர் இல்லாத அப்பளம் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, கடைகளில் கலர் சேர்த்து விற்கப்படும் அப்பளம் மற்றும் வத்தல் ஆகியவற்றை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
newstm.in