இந்த அறிகுறி இருந்தால் டாக்டரை அணுகுங்கள்.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

இந்த அறிகுறி இருந்தால் டாக்டரை அணுகுங்கள்.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

Update: 2022-05-09 16:05 GMT

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சலுக்கு இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா உச்சத்தில் இருந்த கேரளாவில் தற்போது ‘தக்காளி வைரஸ்’ பரவி வருகிறது. இந்நிலையில், கொல்லம் மாவட்டத்தில் மட்டும் 85-க்கும் அதிகமான குழந்தைகள் தக்காளி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது மாதிரியான அறிகுறிகள் குழந்தைகளுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

முதற்கட்டமாக, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தக்காளி வைரசுக்கு அதிகளவில் பாதிக்கப்படுவதால் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

Similar News