இளையராஜாவுக்கு அந்த சுதந்திரம் இல்லையா..?: கேட்கிறார் நடிகை குஷ்பு..!

இளையராஜாவுக்கு அந்த சுதந்திரம் இல்லையா..?: கேட்கிறார் நடிகை குஷ்பு..!

Update: 2022-04-18 12:28 GMT

பாபாசாகேப் அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு ‘அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூ கிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா மீது எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது: “மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று இடதுசாரி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

ஆனால் இன்று, அம்பேத்கர் - மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியாமல் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News