மாநிலங்களவை எம்பியாக இளையராஜா பதவியேற்றார்..!
மாநிலங்களவை எம்பியாக இளையராஜா பதவியேற்றார்..!;
விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவைக்கு நியமன எம்பி-க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம்.
அந்தவகையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோவில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 18-ம் தேதி பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் பதவியற்றுக்கொண்டனர்.
ஆனால், அந்த நிகழ்வில் இளையராஜா பதவியேற்கவில்லை. அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால், இளையராஜாவால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், இளையராஜா இன்று பிற்பகலில் மாநிலங்களவை கூட்டம் தொடங்கியவுடன் எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர், மாநிலங்களவைத் துணைத் தலைவர் முன்பு தமிழில் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.