சட்டவிரோத கருக்கலைப்பு – செவிலியர் உள்ளிட்ட 7 பேர் கைது!!

சட்டவிரோத கருக்கலைப்பு – செவிலியர் உள்ளிட்ட 7 பேர் கைது!!

Update: 2022-05-29 09:06 GMT

தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் மற்றும் இடைத்தரகர்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

செட்டிக்கரை பகுதியில் கருவில் உள்ள சிசுக்களின் பாலினத்தைக் கண்டறிந்து, கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட மருத்துவத்துறை ஊரகப் பணிகள் இணை இயக்குனருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொர்ந்து, காவல் துறையினர் உதவியுடன் செட்டிக்கரை பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு கும்பல் கர்ப்பிணி பெண்களின் சிசுவின் பாலினத்தை அறிந்து கருக்கலைப்பு செய்வது தெரியவந்தது.

திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (33), சதீஷ்குமார்(37), சுதாகர் (37), தருமபுரியை சேர்ந்த கற்பகம் (38) ஆகியோர் எந்த மருத்துவப் படிப்பும் படிக்காமல் கருக்கலைப்பு செய்து வந்துள்ளனர்.

அதற்கு உடந்தையாக இடைத்தரகர்கள் சரிதா(40), குமார்(38), ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (33) இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 7 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

newstm.in

Similar News