“மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்” : பகீர் கிளப்பியுள்ள பிரபல நடிகை!!
“மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்” : பகீர் கிளப்பியுள்ள பிரபல நடிகை!!
பாலிவுட் மாஃபியாக்களும், அரசியல்வாதிகளும் தன்னை துன்புறுத்துவதாக பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இவர் பிரபல நடிகர் நானா படேகர் மீது மிடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதன்பிறகு தனது பட வாய்ப்புகள் பறிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் தனது வேலைக்காரி குடிக்கும் தண்ணீரில் ரசாயானத்தை கலந்ததால் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
வாகனத்தில் இரண்டு முறை பழுதை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்தினர். நான் தப்பித்து மும்பை வந்தேன். இப்போது வீட்டிற்கு வெளியில் அருவருப்பான சம்பவங்கள் நடக்கின்றன. இதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பாலிவுட் மாபியாக்களும், அரசியல்வாதிகளும், கிரிமினல்களும் சேர்ந்து தன்னை துன்புறுத்துகின்றனர் என்றும், அதற்கு மீ டூ வில் குற்றம்சாட்டியவர்கள்தான் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் அழுத்தத்தில் இருப்பதாகவும், குறிவைத்து மிகவும் மோசமாக துன்புறுத்தப்படுகிறேன், தயவுசெய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
newstm.in