குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, பிப்ரவரி 23 முதல் மார்ச் 23-ம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மே 21-ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பிப். 23-ம் தேதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்றும், மார்ச் 23-ம் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும் எனவும் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிட்டது.
இதையடுத்து, பிப். 23-ம் தேதி முதல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக மார்ச் 23-ம் தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அதற்கான காலக்கெடு இன்று மாலையுடன் முடிவடைகிறது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இது தொடர்பான முழு விவரங்களை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.