மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. திருப்புதல் தேர்வுக்கான தேதி மாற்றம்..!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. திருப்புதல் தேர்வுக்கான தேதி மாற்றம்..!

Update: 2022-02-08 17:30 GMT

பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.

அந்தவகையில், 10-ம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 9-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரையும் நடத்தப்படுகிறது.

இதேபோல், 12-ம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு வரும் 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதியும் முடிகிறது.

பொதுத்தேர்வை போல் திருப்புதல் தேர்வும் நடத்தப்படவுள்ளதால், அனைத்து மாவட்ட பள்ளிகளிலும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில்,  10 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கு நாளை (9ம் தேதி) நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு வரும் 17-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வரும் 10-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால், தேர்வுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, 10 மற்றும் 12-ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வு தேதி மாற்றம் குறித்த விவரத்தை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Similar News