பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

Update: 2022-03-06 07:00 GMT

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலினின் 69ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலிந்தோர் மற்றும் கல்வி உதவிக்கான 3.5 லட்சம் மதிப்புள்ள காசோலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர் என்று உறுதி அளித்தார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையின்றி, மன மகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வை எழுத வேண்டும். மனநிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும் என்று கூறிய அமைச்சர் கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள்  குறைக்கப்பட்டுள்ளத என்றார்.

மார்ச் மாத இறுதிக்குள் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்று பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

newstm.in

Similar News