ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!

Update: 2022-05-31 04:45 GMT

சென்னை எழும்பூர்-மதுரை (வண்டி எண்:12635) இடையே மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும்.

காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே காலை 5.05 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.

தஞ்சாவூர்-திருச்சி (06869) இடையே காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது, என அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News