டிஎன்பிஎஸ்சி-யின் முக்கிய அறிவிப்பு..!!
டிஎன்பிஎஸ்சி-யின் முக்கிய அறிவிப்பு..!!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது.
இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான கணினி விழித்தேர்வு ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெடை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் வெளியிட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட்டை மேலே குறிப்பிட்டுள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.