ஆதரவாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு !!
ஆதரவாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்.. ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு !!
அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அதேநேரத்தில் இந்த கோரிக்கை வழக்கம்போல் அதிமுகவில் மீண்டும் கோஷ்டி மோதலை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், ஒற்றை தலைமை விவகாரம் கட்சியில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் ஆதரவு கருத்துக்களை பகிரங்கமாக கூறி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், என பதிவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஈபிஎஸ்க்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
குறிப்பாக ஈபிஎஸ் திமுகவின் கைக்கூலி, முட்டிப்போட்டு பதவி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி என கடுமையான விமர்சனங்களுடன் முழக்கம் எழுப்பினர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022
newstm.in