அலங்காநல்லூர் மற்றும் வடசென்னையில்.. முதல்வர் சொன்ன குட் நியூஸ்..!
அலங்காநல்லூர் மற்றும் வடசென்னையில்.. முதல்வர் சொன்ன குட் நியூஸ்..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (21-ம் தேதி), 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது: “அறிவு சொத்து போல் உடல் வலிமையும் ஒரு சொத்து; விளையாட்டு உடலை துடிப்புடன் வைத்துள்ளது. தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர்.
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும். ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம் ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்த, பீச் வாலிபால் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்ட மைதானம் அமைக்கப்படும். அதேபோல், வட சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும்” எனக் கூறினார்.