அடுத்த 3 மணி நேரத்தில்.. 6 மாவட்ட மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த 3 மணி நேரத்தில்.. 6 மாவட்ட மக்களே உஷார்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Update: 2022-03-24 18:20 GMT

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை  2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தில் அதிகபட்சமாக கொடைக்கானலில் 8 செமீ, பிலவக்கல், ராஜபாளையத்தில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் கோவை, திருப்பூர், விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News