அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Update: 2022-04-14 16:57 GMT

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News