இந்த விடியா அரசில் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!
இந்த விடியா அரசில் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!
“தமிழகத்தில் இந்த விடியா திமுக அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளது” என்று, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் இந்த விடியா திமுக அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப்பேரவை விவாதங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளேன்.
கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, ஆளும் திமுகவைச் சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
அம்மா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது. மெரினா கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராய ஊரல்கள், போலி மது பாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது.
எனவே, அம்மா அரசின் ஆட்சியில் காவல்துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ, அதுபோல் இந்த விடியா அரசும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க, காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.