அதிகரிக்கும் கொரோனா..!! கோவையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..!!
அதிகரிக்கும் கொரோனா..!! கோவையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..!!
தமிழ்நாட்டில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வணிக வளாக கடைகளில் ஏசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் சில மாதங்களாக தொற்று பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் இருந்த சூழலில் தற்போது பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவையில் 200-க்கும் மேற்பட்டோர் தற்போது, வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஒரு நாளின் புதிய பாதிப்பு, 50 என்ற அளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனையை அதிகரிக்கவும் கோவை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.