#BIG NEWS:- அரசியல் அழுத்தம் அதிகரிப்பு.. பதவியை ராஜினாமா செய்கிறார் பிரதமர்..!

#BIG NEWS:- அரசியல் அழுத்தம் அதிகரிப்பு.. பதவியை ராஜினாமா செய்கிறார் பிரதமர்..!

Update: 2022-07-07 14:49 GMT

அரசியல் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

“லண்டன் நாட்டை வழி நடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை” என்று கூறி, அந்த நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும், சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.

இதனால், போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. தற்போது தொடர் ராஜினாமாவாக கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவர் இடைக்கால பிரதமராக நீடிப்பார்.

அக்டோபர் மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தேர்ந்து எடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Similar News