அதிமுகவை ஒத்த ஓட்டு கூட வாங்க வைக்காத சுயேச்சை! ஆனால் கடைசியில் ட்விஸ்ட்!!

அதிமுகவை ஒத்த ஓட்டு கூட வாங்க வைக்காத சுயேச்சை! ஆனால் கடைசியில் ட்விஸ்ட்!!

Update: 2022-02-23 06:00 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில் அதிமுக கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கையின் போது பல சுவாரஸ்யங்கள் நிகழ்ந்தன. அதிமுகவில் வெற்றி பெற்றவர் திமுகவில் சேர்ந்தார். சுயேச்சையாக நின்று வென்றவர்கள் அரசியல் கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வித்தியாசமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. கறம்பக்குடி பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராம்ஷா ஒரு ஓட்டு கூட வாங்காமல் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில் அந்த வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரித்திவிராஜா 175 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், பிரித்திவி ராஜாவும் அவரது தந்தையும் அமமுகவின் நகர பொருளாளருமான பரமசிவம் என்பவரும் அதிமுகவில் இணைந்தனர்.

இது பெரிய ட்விஸ்டாக மாறியது. அதே போல் கரம்பக்குடி அமமுக நகர செயலாளர் சதக்கத்துல்லா உள்ளிட்டோரும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

newstm.in

Similar News